- கோதுமை மாவு - 2 கப்
- நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
- பூரணத்துக்கு:
- முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
- மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
- தனியா பொடி - அரை டீஸ்பூன்
- கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
Method:
- பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
- ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
- அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- (தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
- ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
- உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கவும்.
- பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
- பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
- பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும்.
- ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
- கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
- இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
No comments:
Post a Comment