Tuesday, October 6, 2020

காய்கறி துவையல்

Ingredients:
  • கேரட் - 1
  • பீட்ரூட் - 1
  • பீன்ஸ் - 2
  • முட்டைக்கோஸ் - 1 இலை
  • சௌ சௌ - பாதி
  • வெங்காயம் - 1
  • தேங்காய் - 2 பத்தை
  • மிளகாய் வற்றல் - 2 - 4
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு.


Method:
  • காய்கறிகள் அனைத்தையும் சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெட்டிய காய்கறிகள், மிளகாயைப் போட்டு, உப்பு சேர்த்து லேசாக வதக்குங்கள்.
  • வதங்கியதும் மிக்ஸியில் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
  • மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, உளுந்து போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டுங்கள்.
  • இப்பேது சுவையான காய்கறி துவையல் ரெடி


Notes:
  • நீங்கள் மீந்த எந்த கறிகாயிலும் இப்படி துவையல் செய்யலாம். வெங்காயம் சேர்த்து அல்லது சேர்க்காமல் செய்யலாம்

No comments:

Blog Archive