Tuesday, October 6, 2020

சௌ சௌ துவையல்

Ingredients:
  • சௌ சௌ - 1 காய்...............தோல் சீவி நறுக்கி வைத்துக்கொள்ளவும் அல்லது துருவி வைத்து கொள்ளவும் வதக்க நல்லா இருக்கும்
  • கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
  • உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
  • மிளகாய் வற்றல் - 2 - 4
  • பெருங்காயம் - சிறிது,
  • புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது,
  • உப்பு - தேவைக்கு,
  • எண்ணெய் - கொஞ்சம்
  • கடுகு - 1/2 ஸ்பூன்


Method:
  • வாணலி இல் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அத்துடன் சௌ சௌ சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
  • இத்துடன் புளி பேஸ்ட் , பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு 1/2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
  • அருமையான 'சௌ சௌ துவையல்' தயார்.


Notes:
  • இது காரம் அதிகம் தாங்காது எனவே மிளகாய் வற்றலை பார்த்து போடுங்கள்

No comments:

Blog Archive