Tuesday, October 6, 2020

மாங்காய் இஞ்சி துவையல்

Ingredients:
  • மாங்காய் இஞ்சி 100 கிராம்
  • மிளகாய் வற்றல் – 6 - 8
  • புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் ஒரு சின்ன துண்டு
  • தாளிக்க :
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்


Method:
  • மாங்காய் இஞ்சியை அலம்பி, தோல் சீவி துருவி வைக்கவும்.
  • வாணலி இல் எண்ணை விட்டு மாங்காய் இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும், புளி பேஸ்ட், உப்பு, வெல்லம் எல்லாம் போட்டு அரைக்கவும்.
  • வாணலி இல் எண்ணைவிட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அரைத்ததை போட்டு கிளறி இறக்கவும்.
  • சூப்பரான மாங்காய் இஞ்சி துவையல் தயார்.

No comments:

Blog Archive