Tuesday, October 6, 2020

ஓட்ஸ் கட்லெட்

Ingredients:
  • ஓட்ஸ் - ஒரு கப்
  • வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்
  • வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப்
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • கொத்தமல்லி - 4 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
  • உப்பு - தேவையான அளவு
  • ரஸ்க் தூள் - கால் கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.
  • எண்ணை நெய் கலவை - கட்லெட் செய்ய


Method:
  • ஓட்ஸில் வெந்நீர் தெளித்து, பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  • இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி,
  • எலுமிச்சம் பழச்சாறு எல்லாம் சேர்த்துக் கலந்து, கெட்டியாக பிசையவும்.
  • இந்தக் கலவையை வட்டமாகவோ முக்கோணமாகவோ தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றி எண்ணை நெய் கலவை விட்டு , சிவக்க வெந்தவுடன் எடுக்கவும்.
  • தக்காளி சாஸுடன் பரிமாறலாம் இந்த டேஸ்ட்டி கட்லெட்டை!

No comments:

Blog Archive