Tuesday, October 6, 2020

கோங்கூரா துவையல்

Ingredients:
  • கோங்கூரா (புளிச்ச கீரை) - 1 கட்டு
  • பெரிய வெங்காயம் - 1
  • மிளகாய் வற்றல் - 6
  • புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • பூண்டு - 6 பல்
  • உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்


Method:
  • கோங்கூராவை மண் போக அலசி நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கோங்கூராவை வதக்கவும்.
  • எல்லாவற்றையும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
  • கோங்கூரா துவையல் ரெடி.
  • இதை நெய் விட்டு பிசைந்து சாப்பிடணும், ரொம்ப சூடு பண்ணும் உடம்புக்கு

No comments:

Blog Archive