- வேகவைத்த அரிசி சாதம் - 1 கப்
- நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
- துருவிய சீஸ் - 1/4 கப்
- துருவிய கேரட் - 1 டேபிள் ஸபூன்
- நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய மல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்
- இடித்த மிளகாய் வற்றல் துாள் - 1 டீ ஸ்பூன்
- மிளகாய் துாள் - 1/2 டீ ஸ்பூன்
- உப்பு - ருசிக்கு
- மைதா - 1/2 கப்
- எண்ணெய் - தேவைக்கு
Method:
- மைதா மாவு தவிர, தேவையான பொருட்கள் அனைத்தையும், நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதன்பின், மைதா மாவை சேர்த்து பிசைய வேண்டும். சமைத்த சாதத்தில், நீர்ச் சத்து இருக்கும் என்பதால், தனியாக, தண்ணீர் சேர்க்க வேண்டாம். அனைத்தும் நன்கு கலந்த பின், சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே வைக்கவும்.
- வாணலியில், தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும், உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் தொட்டு, சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment