Thursday, October 8, 2020

கச்சோடி (Rajasthani)

Ingredients:
  • 2 tbsp - தனியா
  • 1 tbsp - சோம்பு
  • 1/2 tbsp - சீரகம் ...இந்த மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ¼ tsp – பெருங்காய பொடி
  • 1/2 tbsp - காய்ந்த வெந்தயக் கீரை அல்லது பிரெஷ் கீரை - பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • 2 tbsp - மிளகாய் பொடி
  • 1 tsp - கருப்பு உப்பு ( இது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...சாதாரண உப்பு போடலாம் )
  • 1/2 tsp - கரம் மசாலா
  • 1 tbsp - ஆம்சுர் எனப்படும் மாங்காய் பொடி அல்லது / 1/8 tsp - சிட்ரிக் ஆசிட் / 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1/2 tsp - மிளகுப் பொடி
  • 1/3 cup - கடலை மாவு
  • 1/2 cup - பயத்தம் பருப்பு - ஒரு முக்கால் முதல் ஒருமணி நேரம் வரை ஊறவைத்து, ஜஸ்ட் ஒரே ஒரு சுற்று மிக்சி இல் சுற்றி எடுக்கவும். பருப்பு மிகவும் பொடியாகக்கூடாது, மாவாகவும் ஆகக் கூடாது...ஒன்றிரண்டாக உடைந்தால் போதுமானது
  • 1 tbsp பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி நசுக்கி வைத்துக் கொள்ளவும்
  • 2 tbsp – எண்ணெய்
  • மேல் மாவுக்காக :
  • 2 1 / 2 cup - மைதா
  • 1 tsp - உப்பு
  • 1 /2 – உருகிய நெய்
  • கொஞ்சம் தண்ணீர்


Method:
  • முதலில் பருப்பை அலசி ஊற வைக்கவும்.
  • இது ஒரு ஒரு முக்கால் முதல் ஒருமணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
  • பருப்பை ஊறவைக்கும்போதே மேல்மாவை தயாரித்து வைத்துவிடலாம்....
  • இதுவும் 30 நிமிடங்கள் ஊறவேண்டும்.
  • ஒரு பேசினில் மைதாவை போட்டு, அதில் உப்பு போட்டு, நெய்யை விட்டு நன்கு கலக்கவும்.
  • பொறுமையாக கலக்கவும்.
  • நன்கு கலந்ததும் மாவை கையால் பிடித்தால், அதாவது ஒரு பிடி மாவை எடுத்து கையால் அழுத்திப் பிடித்தால் அது பிடிக்க வரவேண்டும்.
  • பிடி கொழுக்கட்டை போல பிடிக்க வரவேணும், மீண்டும் உதிர்த்தால் உதிரவேண்டும்...இது தான் மாவு பதம்.
  • சரியாக ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில் நெய்யும் மாவும் இருந்தால் இப்படி வரும்.
  • ( சமோசாவுக்கும் இதே பதம் தான்
  • இப்போ கொஞ்சம் கொஞ்சமாக லேசாக சூடான தண்ணீர் விட்டு மாவை பிசைய ஆரம்பிக்க வேண்டும்.
  • நன்கு அழுத்திப் பிசையவேண்டும்.
  • மாவு நல்லா 'மெத் மெத்' என்று பஞ்சு போல ஆகும்வரைக்கும் பிசையவேண்டும்.
  • சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் அப்படி பிசையவேண்டும்.
  • முடிக்கும்போது மாவு கைகளில் ஓட்ட கூடாது.
  • இந்த மாவை அப்படியே மூடி வைத்து விடுங்கள்.
  • அது ஊறட்டும் அதற்குள் நாம் உள்ளே வைக்க வேண்டியதை தயார் செய்வோம்.
  • ஒரு வாணலி இல் எண்ணெய்விட்டு, ஒன்றிரண்டாக பொடித்து வைத்துள்ள தனியா முதலியவைகளை போடவும்.
  • கொஞ்சம் வறுபட்டதும், நசுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை போட்டு வதக்கவும்.
  • அடுப்பை நிதானமாக எரியவிடவும்... அப்போதுதான் எல்லாம் கருகாமல் வறுபடும்.
  • அடுத்ததாக, மிளகுப் பொடி, மிளகாய் பொடி, ஆம்சூர், கரம்மசாலா, வெந்தயக் கீரை மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
  • ஒரு இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்குங்கள்.
  • அப்புறம் கடலைமாவை தூவி, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
  • எல்லாமாக சேர்ந்து கொண்டு நல்ல மணம் வரும்.
  • இப்போது ஒன்றாண்டாக அரைத்து வைத்துள்ள பருப்பை போட்டு நன்கு கிளறவும்.
  • இதை ஒரு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.
  • பிறகு அதை ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆறவைக்கவும்.
  • நன்கு ஆறினதும், அந்த மசாலாவை நன்கு பிசைந்து, சின்ன சின்ன உருண்டைகளாக அழுத்தி பிடித்தது வைத்துக்கொள்ளவும்.
  • மேலே சொன்ன அளவிற்கு கிட்ட தட்ட 15 உருண்டைகள் வரும்.
  • இப்போது மேல்மாவை எடுத்து நன்கு ஒருமுறை அழுத்தி பிசையவும்.
  • அதிலிருந்து கொஞ்சம் மாவை எடுத்து உருட்டி, இந்த மசாலா உருண்டையை வைத்து கொழுக்கட்டை மாவிற்குள் பூரணத்தை எப்படி உள்ளே வைப்போமோ அது போல வைத்து உருண்டையாக ஆக்கவும்.
  • இது போல் எல்லா வற்றையும் செய்யவும்.
  • பிறகு ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையால் அழுத்தி, தட்டை போல செய்யவும்.
  • இது போல ஒரு 4 செய்து கொள்ளவும்.
  • அடுப்பில் எண்ணெய் வைத்து அது சுடும் முன்னரே இந்த கச்சோடிகளை போடவும்.
  • அடுப்பை மிகவும் நிதானமாக எரியவிடவும்.
  • ஒரே சமயத்தில் ஒரு நான்கு கச்சோடிகள் பொறிக்கலாம்.
  • இது ஒரு பக்கத்தில் வேகவே 4 - 5 நிமிடங்கள் எடுக்கும்.
  • பிறகே அதை திருப்பி போடவேண்டும்.
  • அதுவும் 4 நிமிடங்கள் எடுக்கும்.
  • இப்போது பொன்னான நிறத்தில் கச்சோடிகள் தயார்.
  • கச்சோடிகள் பொறியும் வரை மற்ற உருண்டைகளை மூடி வைக்கவும்.
  • பொறித்தானதும் அடுப்பை அணைத்து விடவும், எண்ணெய் நன்கு ஆறினதும் மீண்டும் அடுப்பை மூட்டி, எண்ணெய் சுட ஆரம்பிப்பதற்குள் அடுத்த நான்கு கச்சோடிகளை போட்டு பொறிக்கவும்.
  • இது மிக முக்கியம், இப்படி செய்தால் தான் கச்சோடிகள் நன்கு பொறியும்.
  • இதை இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
  • இதற்கு , பச்சைமிளகாய் புதினா சட்னி, மற்றும் பேரீச்சம்பழம் இனிப்பு சட்னி அருமையாக இருக்கும்.
  • அது இல்லாவிட்டாலும் , வெறும் தயிரில் உப்பு மற்றும் சீரகப் பொடி போட்டு வைத்துக் கொண்டாலும் போதும், அருமையாக இருக்கும்.


Notes:
  • இதைப் அடிக்கத்தான் நேரம் அதிகம் ஆனது, செய்வதற்கு அதைவிட குறைவான நேரமே போதும்..செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

Images:






No comments:

Blog Archive