- துவரம் பருப்பு 200 கிராம்
- பாகற்காய் 250 கிராம்
- துருவின தேங்காய் 1/2 கப் ( சிவக்க வறுத்து வைத்துக்கொள்ளவும் )
- APP 5 -6 டீ ஸ்பூன்
- புளி பேஸ்ட் 4 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு அல்லது பச்சை வேர்கடலை 1 கை பிடி அளவு
- எண்ணை
- உப்பு
- கறிவேப்பிலை
- தாளிக்க கடுகு
- வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி கொஞ்சம்
- பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
Method:
- முதலில் பாகற்காய் யை அலம்பி நறுக்கவும்.
- கொட்டைகளை நீக்கவும்.
- உப்பு போட்டு பிசிறி வைக்கவும்.
- 10- 15 நிமிடம் கழித்து நன்கு பிழிந்து அதை குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
- உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
- அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, வெந்தய பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
- அப்பப்போ கிளறி விடவும்.
- நன்கு கொதித்ததும், வறுத்து வைத்த தேங்காயை தூவி ,கிளறி இறக்கவும்.
- சுவையான 'பாகற்காய் பிட்லை' ரெடி
Notes:
- பொதுவாக இதை பாகற்காய் இல் மட்டும் தான் செய்வது வழக்கம்....ஒருவேளை கத்தரிக்காய் இல் செய்தால் அதன் பேர் 'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி' ...அதன் குறிப்பு மேலே கொடுத்துள்ளேன்.
- பாகற்காய்ல உப்பு போட்டுள்ளதால் 'பிட்லைக்கு' போடும்போது பார்த்து போடவும்.
No comments:
Post a Comment