- சுக்கு 15 கிராம்
- மிளகு 15 கிராம்
- ஓமம் 15 கிராம்
- கண்டந்திப்பிலி 10 கிராம்
- கிராம்பு 10 கிராம்
- ஏலம் 10 கிராம்
- மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
- வெல்லம் - மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைத்து, அந்த விழுது எவ்வளவோ அந்த அளவு வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- நெய் 3 - 4 டேபிள் ஸ்பூன் அல்லது நெய் 3 டேபிள் ஸ்பூன் + நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.
Method:
- மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைக்கவும்.
- அதே அளவு வெல்லத்தூள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
- உருளி இல் கொஞ்சம் நெய் விட்டு, அரைத்த விழுதை போட்டு கிளற ஆரம்பிக்கவும்.
- அடுப்பு சின்னதாகவே எரியட்டும்.
- அவ்வப்போது கிளறி விடவும்.
- அடி பிடிப்பது போல் இருந்தால் இன்னும் கொஞ்சம் நெய் விடவும்.
- நன்கு சுருள வதங்கியதும், நெய் தானே பிரிய ஆரம்பிக்கும்.
- கை இல் கொஞ்சம் லேகியம் எடுத்ததால், கொஞ்சமும் ஒட்டாமல் உருட்ட வரும் அது தான் சரியான பதம் .
- அப்போது உருளியை இறக்கிவிடவும்.
- நன்கு ஆறினதும், கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
- வருடம் பூராகவும் நன்றாக இருக்கும்.
Notes:
- இந்த பொருட்களைத் தவிர இன்னும் இரண்டு சேர்க்கலாம். அவை சித்தரத்தை - 10 கிராம் மற்றும் அரசி திப்பிலி 5 கிராம். மொத்தப்பொருட்கள் ஒற்றைப்படை எண்ணிக்கை இல் இருக்கவேண்டும்.
- தீபாவளி அன்று மட்டும் இல்லை, எப்போது வயிறு சரி இல்லை என்று தோன்றினாலும், ஒரு சின்ன கோலி குண்டு அளவு இந்த லேகியத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு, சூடான தண்ணீர் குடிக்கவும். சரியாகிவிடும்.
Images:
No comments:
Post a Comment