- 2 காரட் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
- 2 கப் குழப்பின கெட்டி தயிர்
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
- இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
- உப்பு
- தாளிக்க :
- அரை ஸ்பூன் கடுகு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- அரை ஸ்பூன் எண்ணெய்
Method:
- ஒரு பேசினில் , துருவிய காரட், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
- தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
- அவ்வளவுதான், சுவையான காரட் பச்சடி ரெடி.
- எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.
Notes:
- சிலர் காரட்டை துருவாமல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.
No comments:
Post a Comment