Thursday, October 8, 2020

'புஸு புஸு' MTR 'ரவா இட்லி'

Ingredients:
  • கெட்டித்தயிர் - அரை லிட்டர் ( மட்டாக தண்ணீர் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும் )
  • பாம்பே ரவை -2 1 /2 கப்
  • பன்சிரவை - சீரொட்டி ரவை என்றும் சொல்வார்கள் 2 1 /2 கப்
  • பொடியாக நறுக்கிய கொத்துமல்லி ஒரு கப் நிறைய
  • பொடித்த சர்க்கரை ஒரு டீ ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • முழு முந்திரி ஒரு கைப்பிடியளவு - இரண்டாக பிளந்து வைத்துக் கொள்ளவும்
  • எண்ணெய் கால் கப்
  • ENO FRUIT SALT PLAIN 1 1 /2 டேபிள் ஸ்பூன்
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன்
  • பொடியாக துருவிய இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன்


Method:
  • ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு ரவைகளை போட்டு நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய் வைத்து முதலில் முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு, தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, கலந்து வைத்துள்ள ரவை கலவை மீது இதைக் கொட்டவும்.
  • நன்கு கலக்கவும்.
  • உப்பு மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
  • இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தயிர் மற்றும் தண்ணீர் விட்டு கலக்கவும்.
  • ஒவ்வொரு முறை விடும்போதும், இட்லி மாவை நன்கு கலக்க வேண்டும்.
  • தேவையானால் மீண்டும் கொஞ்சம் தயிர் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் என்று விட்டு கலக்கவும்.
  • இப்போது பொடியாக நறுக்கிய கொத்துமல்லி யை போட்டு நன்கு கலக்கவும்.
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • இந்த ஸ்டெப் தான் மிக முக்கியம்....
  • ENO FRUIT SALT ஐ கொடுத்துள்ள அளவின் படி, மாவில் போட்டு நன்கு கலக்கவும்.
  • இதை செய்ததும், உடனடியாக இட்லி தட்டுகளில் மாவை விட்டு விடவேண்டும். ஊற வைக்க வேண்டாம்.
  • பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் முதலில் ஒரு முந்திரி யை நடுவில் வைக்கவும்.
  • அதன்மேல் மாவை விட்டு இட்லி பானை இல் வைக்கவும்.
  • பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.
  • இட்லி பானையை திறந்து, இட்லி தட்டுகளை எடுத்து ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  • நாம் வைத்த மாவைவிட இரண்டு மடங்காக இருக்கும் இந்த இட்லி.
  • பார்க்கவே 'புஸு புஸு ' என்று மிக அழகாக இருக்கும்.
  • நன்கு ஆறினதும், இட்லிகளை மெதுவாக ஸ்பூன் மூலம் எடுக்கவும்.
  • மெத் மெத் என்கிற , MTR போலவே சுவையான 'ரவா இட்லி' தயார் .
  • தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், ஆனால் உங்களுக்கு தேவையானால் , தோசை மிளகாய் பொடி அல்லது எந்த சட்னியுடனும் பரிமாறலாம் .

No comments:

Blog Archive