- பங்களூர் தக்காளி 1/2 கிலோ
- பச்சை மிளகாய் 15 - 20
- இஞ்சி துருவினது 1 - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- பெருங்காயம் 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
- வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
- APP 4 - 5 ஸ்பூன்
- எண்ணை தாளிக்க
- உப்பு
- கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
Method:
- தக்காளிகளை நன்கு அலம்பி, விதைகள் நீக்கி, சின்ன சின்னதாக நறுக்கி வைக்கவும்.
- பச்சைமிளகாய்களையும் அதே போல செய்யவும்.
- வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
- பின் பச்சைமிளகாய் இஞ்சி துருவல் போட்டு வதக்கவும்.
- இப்போ தக்காளிகளை போடவும்.
- பிறகு, பெருங்காயம், மஞ்சள் பொடி, வறுத்துப்பொடித்த வெந்தய பொடி மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
- அது நன்கு வதங்கினதும் APP போட்டு மீண்டும் நன்கு கிளறவும்.
- கறிவேப்பிலை கொத்துமல்லி தூவி இறக்கவும்.
- ஆறினதும் பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
- ஃபிரிஜ் இல் வைத்திருந்தால் 6ஃப் மாசம் கூட வைத்துக்கொள்ளலாம்
- தேவையான பொது எடுத்து சாதத்தில் கலந்து பரிமாறவு.
- பொறித்த அப்பளம் மற்றும் உருளை சிப்ஸ் இதற்க்கு நல்லா இருக்கும்.
- இல்லா விட்டால் 'வெங்காய ராய்த்தா ' செய்யலாம்.
Notes:
- இதை செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் தக்காளி சாதம் கலக்கலாம். ரொம்ப சுலபம், மேலும் டிபன் பாக்ஸ் கட்ட ரொம்ப சௌகர்யமாக இருக்கும். பிக்னிக் செல்லும்போது கலந்து எடுத்துக்கலாம், மோர்சாதத்துக்கு தொட்டுக்கலாம், ஒட்சில் போடலாம் நிறைய விதமாக உபயோகிக்கக்கலாம் தக்காளி மலிவாக கிடைக்கும்போது தொக்கு செய்வது போல இதையும் செய்து வைத்துக்கொண்டால் நல்லது.
- இதில் பச்சை மிளகாயுடன் மிளகு உடைத்து போடலாம். வேண்டுமானால் சில பற்கள் பூண்டு சேர்க்கலாம். ஒவ்வொரு முறை வேறு வேறு விதமாக செய்வதால் ருசி வேறு படும்.ஆனால் எல்லாமே நல்லா இருக்கும் .
No comments:
Post a Comment