- மீந்த சப்பாத்தி - 5
- பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 2
- காரட் 2
- எண்ணெய் - 3 + 3 தேக்கரண்டி
- பீன்ஸ் ஒரு கைப்பிடி அளவு
- கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்
- உப்பு - தேவையான அளவு.
- கரம் மசாலா - 1 /2 டீ ஸ்பூன்
Method:
- வெங்காயம், பச்சைமிளகாய், காரட் , பீன்ஸ் , குடமிளகாயை நீள வாக்கில் நறுக்கவும்.
- சப்பாத்தியை, ரோல் செய்து, நீள வாக்கில் மெல்லிய நுாடுல்ஸ் போல நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு , நறுக்கி வைத்துள்ள , நூடுல்ஸ் போல நறுக்கின சப்பாத்திகளை பொறித்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
- மீண்டும் அதே வாணலியில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- தேவையானால் இன்னும் எண்ணெய் விட்டுக்கொள்ளவும்.
- உப்பு மிளகாய்ப்பொடி போடவும்.
- இந்த கலவையில், நறுக்கி, வறுத்த சப்பாத்தியை போடவும்.
- தீயை மிதமாக்கி மேலாக கிளறவும்.
- கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- சுவைமிக்க, 'சப்பாத்தி நுாடுல்ஸ்' தயார்.
No comments:
Post a Comment