- அரு /அரை நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
- மிளகாய் பொடி 200 கிராம்
- உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
- வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
- கடுகு 1 டேபிள் ஸ்பூன்
Method:
- நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
- ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
- அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
- நன்கு கிளறிவிடவும்.
- மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
- நன்கு கிளறி விடவும்.
- கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
- மீண்டும் நன்கு கிளறி விடவும்.
- எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
- நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
- வருஷத்துக்கும் கெடாது
Notes:
- நெல்லிக்காய்கள் மிகவும் சிறியதாக, துருவ கஷ்டமாக இருந்தால், கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்
No comments:
Post a Comment