தேவையானவை :
1 டின் மில்க் மெய்டு
1 ஸ்பூன் தயிர்
செய்முறை:
மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
தயிர் சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
கிளறி சுவை பார்க்கவும்.
அருமையான திரட்டுப்பால் ரெடி.
குறிப்பு: உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம்
No comments:
Post a Comment