- 1 கிலோ கெட்டி அவல்
- 1/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
- 1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 200 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
- உப்பு
Method:
- முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
- பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
- இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
- ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா. வெங்காயம், ஓமம் அல்லது சீரகம் (தேவை இல்லை என்றால் போடவேண்டாம் ) மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
- நன்கு பிசையவும்.
- பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
- காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
- தேவயான போது வறுக்கலாம்.
- கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
- வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
- நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.
Notes:
- அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
- அபாரமாக இருக்கும்
No comments:
Post a Comment