Wednesday, October 7, 2020

கல்யாண மாங்காய்

Ingredients:
  • பெங்களுரா மாங்காய் - 1 ( கிளிமூக்கு மாங்காய் )
  • மிளகாய் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • வறுத்துப் பொடித்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
  • பெருங்காய பொடி - 1 டீஸ்பூன்.
  • தாளிக்க:
  • நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 டேபிள்ஸ்பூன்


Method:
  • மாங்காயைக் அலம்பி துடைத்துப் பொடியாக நறுக்கவும்.
  • அதை ஒரு பேசினில் போடவும் .
  • அதன் மேல் சுற்றிலும் உப்பைத் தூவவும்.
  • பிறகு மிளகாய் பொடி தூவவும்.
  • அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
  • ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே மாங்காயின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
  • அவ்வளவுதான், இதை உடனே யே தொட்டுக்கொள்ளல்லாம்.
  • கல்யாணம் மற்றும் சீமந்தங்களில் இப்படி செய்வார்கள் , அதனாலேயே இந்த பேர் வந்தது


Notes:
  • இப்ப மாங்காய் சீசன் அல்லவா, அதனால் முதலில் மாங்காய். அதிலும் இது ரொம்ப சிம்பிளான ஊறுகாய் - 'கல்யாண மாங்காய்' இதை 1 வாரம் வைத்துக்கொள்ளலாம். பிரிட்ஜ் இல் வைத்தால் 1 மாதம் வைத்துக்கொள்ளலாம்.

Images:


No comments:

Blog Archive