- ஒரு கை நிறைய மிளகாய் வற்றல்கள் அல்லது பழுத்த பச்சை மிளகாய் - அல்லது எண்ணிக்கை தான் வேண்டும் என்றால் 15- 20 மிளகாய்கள் போதும்
- புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
- துவரம் பருப்பு 1/2 கப்
- தாளிக்க:
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
- உப்பு
- கறி வேப்பிலை 1 கை
- நெய் 2 ஸ்பூன்
- 1 /4 மஞ்சள் பொடி
Method:
- முதலில் துவரம் பருப்பை அலசி, குக்கரில் குழைய வேகவைக்க வேண்டும்
- பருப்பு வைக்கும்போதே, மிளகாய்களையும் அலசி, தனி கிண்ணத்தில் போட்டு பருப்புடன் வேகவையுங்கள்
- வெளியே எடுத்ததும், கை பொறுக்கும் சூட்டில் அந்த வெந்த மிளகாய்களை நன்கு கசக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள் (அந்த விதைகள் பல் இடுக்கில் மாட்டிக்கொண்டு கஷ்டம் கொடுக்கும்)
- பருப்பையும் நன்கு மசித்து , புளி பேஸ்ட் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்
- ஈய சொம்பை பயன்படுத்துவதாக இருந்தால், இதை எல்லாம் அதில் கொட்டி கொதிக்க விடவும்
- கைவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு போடவும்
- நன்கு கொதிக்கட்டும்
- வாணலி இல் நெய்விட்டு, மற்ற பொருட்களை போட்டு தாளித்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்
- நன்கு கொத்தித்து பொங்கும் போது, மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு விளாவ வேண்டும்
- அது மீண்டும் கொதித்ததும் இறக்கிவிடலாம்
- அவ்வளவுதான் அருமையான, சுவையான மிளகாய் பழ ரசம் ரெடி
- இதற்கு தேங்காய் துவையல் தான் காம்பினேஷின்
- மிக அருமையாக இருக்கும்
Notes:
- இந்த ரசத்துக்கு காரம் என்பது நாம் போடும் மிளகாய் மட்டுமே. அதனால் உங்களுக்குத் தேவையான அளவு போடவும். மேலும், இதற்கு ரஸப் பொடி வேண்டாம்
- எங்கள் வீட்டில் இது ரொம்ப விரும்பப்படும் ரசம்
- அதற்கு இரண்டு காரணங்கள்
- ஒன்று இது என் தாத்தா ( மாமனார்) ரின் குறிப்பு, நான் சின்ன வயதில் இருந்தபோது சொல்லித் தந்தார்
- மற்றது இதன் அசாத்திய சுவை
- ஒருமுறை செய்து பார்த்தீர்கள் என்றால் பின்பு விடவே மாட்டீர்கள்
Images:
No comments:
Post a Comment