Wednesday, October 7, 2020

கொள்ளு துவையல் - 2

Ingredients:
  • கொள்ளு : 1 / 2 கப்
  • தேங்காய் : 1/2 மூடி
  • சிவப்பு மிளகாய் : 7
  • பூண்டு : 7 பல்
  • உப்பு : தேவையான அளவு


Method:
  • தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலில் இல் கொள்ளைப் போட்டு , மிதமான தீ இல் , கருகாமல் , நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  • பூண்டை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டால் மிக்ஸியில் நன்றாக அரைபடும்.
  • இப்போது தேங்காய், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கொள்ளு துவையல் தயார்.
  • சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்


Notes:
  • கொள்ளு உடம்பிற்கு மிகவும் நல்லது. எனவே, கொள்ளு துவையல், கொள்ளு தால், என்று வாரம் ஒருமுறையாவது உடம்புக்கு சேர்த்துக்கொள்வது நல்லது.

No comments:

Blog Archive