- 1 கப் பாம்பே ரவா
- 3 - 4 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவு அல்லது அரைத்த உளுந்து ஒரு கை
- ( இட்லிக்கு அரைக்கும்போது கொஞ்சம் எடுத்துக்கோங்கோ)
- வெங்காயம் - தேவையானால்
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்
- உப்பு
Method:
- ரவை இல் உளுத்தம் மாவு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு எல்லாம் போட்டு மட்டா தண்ணீர் விட்டு பிசையவும்.
- ஒரு அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
- பிறகு வாணலி இல் எண்ணெய்வைத்து அது சுட்டதும், மாவை உருட்டி போண்டாக்கள் போடவும்.
- தேவையானவர்கள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
- ரவை இருப்பதால் மொறுமொறுப்பாகவும், உளுந்து என்பதால் உள்ளே மெத் என்றும் அருமையாக இருக்கும்.
- வெறுமனையே நல்லா இருக்கும், வேண்டுமானால் தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறலாம்.
Images:
No comments:
Post a Comment