Wednesday, October 7, 2020

கோங்குரா (புளிச்சகீரை) தொக்கு

Ingredients:
  • புளிச்சகீரை – 1 கட்டு
  • புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் – ஒரு சிறிய துண்டு
  • உப்பு
  • தாளிக்க:
  • கடுகு – 1 டீஸ்பூன்,
  • பூண்டு – 6 - 8 பல் (பொடியாக நறுக்கி வைக்கவும் )
  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
  • வறுத்துப் பொடிக்க:
  • கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 15
  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.


Method:
  • கீரையை இலைகளாகக் ஆய்ந்து அலம்பித் துடைத்து, ஒரு துணியில் பரப்பி, ஒரு மணி நேரம் வரை உலர விடுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து, சற்று சிவந்ததும் அரித்து எடுங்கள்.
  • மீந்துள்ள எண்ணெயில் கீரையை நறுக்கி போட்டு, நன்கு வதக்குங்கள்.
  • கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள்.
  • வதக்கிய கீரை, புளி, வறுத்த கடுகு, வெந்தயம், மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வதக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தொக்கில் சேர்த்துக் கலக்குங்கள்.
  • அருமையான 'கோங்குரா தொக்கு' ரெடி...ஆந்திரர்கள் இதை 'கோங்குரா பச்சடி' என்றே சொல்வார்கள் புன்னகை
  • சாதம் போட்டு சாப்பிடனும் என்றால் நிறைய நெய் விட்டுக்கொள்ளுங்கள் இது ரொம்ப சூடு.

No comments:

Blog Archive