- கடலை பருப்பு 1 கப்
- துவரம் பருப்பு 1/4 கப்
- மிளகாய் வற்றல் 6 - 8
- பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்_ 10 அல்லது பெரிய வெங்காயம் 1 - பொடியாக நறுக்கவும்.
- இஞ்சி_ 1 துண்டு - தோல்சீவி, துருவி வைத்துக்கொள்ளவும்.
- பூண்டு_ 2 - 3 - பொடியாக நறுக்கவும்.
- பச்சை மிளகாய் 2 - தேவையானால்
- சோம்பு 1 டீஸ்பூன் - தேவையானால் ஒன்றிரண்டாக பொடித்து போடலாம்
- கொத்துமல்லி
- கறிவேப்பிலை
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி , ஒரு 1/2 மணி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- அப்புறம், ஒருகை பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பாக்கி பருப்பை, மிளகாய் வற்றல் சேர்த்து கொஞ்சம் 'நர நர' வென்று அரைக்கணும்.
- தண்ணீர் மட்டாய் விடணும்.
- அரைத்த மாவை ஒரு பேசினில் போடணும்.
- அதில் பாக்கி சாமான்களை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கணும்.
- மாவு நல்ல கெட்டியாக இருக்கணும், ஒருவேளை கொஞ்சம் தளர இருந்தால், சிறிது அரிசிமாவு போட்டு கலந்துக்கலாம்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, உள்ளங்கை களுக்கு இடை இல் வைத்து அழுத்தி, ஓட்டை போடாமல் , தட்டி எண்ணெய் இல் போடணும்.
- வடைகளை இருபுறமும் திருப்பி விட்டு, நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- இப்போது சூப்பரான மசால் வடை ரெடி!
- 'கரகர'பாக ரொம்ப நல்லா இருக்கும்.
Notes:
- சாப்பிட்டு மீதம் இருந்தால் எலி பிடிக்க வைத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment