- கொள்ளு - இரண்டு டேபிள் ஸ்பூன்
- தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
- துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
- மிளகு - ஒரு டீஸ்பூன்
- சீரகம் - அரைடீஸ்பூன்
- பெருங்காயம் - சிறிது
- தக்காளி - 2
- மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
- புளிபேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க:-
- நெய் - 2 டீஸ்பூன்
- கடுகு - அரை டீஸ்பூன்
- பெருங்காயம் - சிறிது
- கொத்தமல்லி - சிறிதளவு
Method:
- ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுக்க வேண்டும்.
- ஆறியவுடன், வறுத்த கொள், தனியா, 1 தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
- ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும். கொள்ளு நன்றாக வெந்ததும், புளி இன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
- இது ஒரு 2 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
- தாளிக்கும் கரண்டி இல் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், பெருங்காயம் போட்டு வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.
- கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு சாப்பிடவும்.
- சூடாக 1 கப் குடிக்க கூட செய்யலாம் ...அருமை ஆக இருக்கும் ....நெஞ்சு கபம் போவதற்கு ரொம்ப நல்லது
No comments:
Post a Comment