இந்த கால குழந்தைகளுக்கு இந்த 'கமர் கட்' பற்றி தெரியுமா என்பதே சந்தேகம் தான். கட்பெர்ரி இஸ் இல்லாத காலத்தில் ரொம்ப 'மவுசுடன்' இருந்த இனிப்பு சாக்கலேட் என்று கூட சொல்லலாம். இனி அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பாகு வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 4 - 5 ஸ்பூன்
செய்முறை :
ஒரு தாம்பாளத்தில் அரிசி மாவை பரவலாக தூவி வைக்கவும்.
வெல்லத்தை நறுக்கி - தூளாக்கி தண்ணீரில் போட்டு கரைய விடவும்.
வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்
அது கெட்டியாகும் பொது, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகிலிருந்து கொஞ்சம் கரண்டியால் எடுத்து அந்த தண்ணீரில் விடவும்.
கையால் உருட்டி பார்த்தால் உருட்ட வரணும்.
அதை ஒரு பாத்திரத்தில் ஓங்கி அடித்து பார்த்தால், நல்ல 'வெண்கல சத்தம்' வரணும்.
'டங்கு' என்று சத்தம் வரணும்.
அப்படி வந்து விட்டால் சரியான படம் என்று அர்த்தம்.
உடனே அடுப்பை நல்ல சின்ன தாக்கி விட்டு, தேங்காய் துருவல் மர்ற்றும் ஏலப்பொடி போட்டு நல்லா கிளறி இறக்கிடனும்.
பாகை கரண்டி கரண்டியா க எடுத்து ,தாம்பாளத்தில் உள்ள அரிசி மாவின் மேல் விடணும்.
உடனே சூட்டுடன் உருட்டனும்.
உருண்டையாகவோ, நீள் உருண்டையாகவோ விரும்பியவாறு உருட்டலாம்
அரிசி மாவு அதன் மேல் நல்லா ஒட்டிக்கொண்டு விட்டால் இந்த 'கமர் கட்' ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
வேண்டுமானால், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.
அல்லது அலுமினிய ஃபாய்ல் களில் சுற்றி வைக்கலாம்.
நிச்சயம் குழந்தைகள் என் உங்களுக்கும் பிடிக்கும்.
செய்து பாருங்கள்.
Tuesday, August 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2011
(254)
-
▼
August
(65)
-
▼
Aug 30
(19)
- அரிசி வடை
- கோபி 65
- மாலைநேர சிற்றுண்டிகள்
- நெய் இல்லாத போளி
- தேங்காய் கோவா போளி
- பருப்பு சக்கரை போளி
- பால் போளி 2
- பால் போளி
- பருப்பு போளி
- தேங்காய் போளி
- 'கமர் கட்'
- பொரி மாவு உருண்டை 2
- பொறி மாவு
- பொரி மாவு உருண்டை
- கோதுமை வெல்ல உருண்டை
- அவல் சக்கரை
- தேங்காய் பால் எடுப்பது எப்படி?
- பால் கொழுக்கட்டை
- இனிப்பு சிற்றுண்டிகள்
-
▼
Aug 30
(19)
-
▼
August
(65)
No comments:
Post a Comment