இது ரொம்ப சுவையான டிஷ் அருண், உங்களுக்காக கோபி 65
இதோ செய்முறை
தேவையானவை :
காலிஃப்ளவர் 1 பூ
corn flour - அதாவது சோள மாவு 1/2 கப்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கேசரி கலர் - 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை - பொறிக்க
செய்முறை:
காலிஃப்ளவர் ஐ குட்டி குட்டி பூக்களாக உதிர்க்கவும்.
கை பொறுக்கும் சூட்டில் உள்ள சூடு நீரில் உப்பு மட்டும் இந்த பூக்களை போடவும் .
இதில் பூச்சிகள் இருந்தால் அவை வெளியே வந்துவிடும்.
ஒரு 10 நிமிஷம் அப்படி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில் இந்த பூக்களை எடுத்து, போடவும்.
ஒரு முடியால் முடி வைக்கவும்.
இது ஒரு 5 நிமிடம் இருந்தால் போதுமானது.
அதில் இந்த பூக்கள் பாதி வெந்து விடும்.
ஒரு பேசினில் மற்ற எல்லா பொருட்களையும் போட்டு மட்டாய் தண்ணி விட்டு கரைக்கவும்.
அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து, பூக்களி இந்த மாவில் முக்கி போட்டு பொரிக்கவும்.
அல்லது, எல்லா பூக்களியும் மாவில் கொட்டி, நன்கு பிசிறி, பிறகு பொரிக்கவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.
corn flour என்பதால் நல்ல கரகரப்பாக வரும்.
குறிப்பு: சிலர் மைதா + அரிசி மாவு போட்டு செய்வார்கள். அதுவும் நல்லா இருக்கும்.
Tuesday, August 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2011
(254)
-
▼
August
(65)
-
▼
Aug 30
(19)
- அரிசி வடை
- கோபி 65
- மாலைநேர சிற்றுண்டிகள்
- நெய் இல்லாத போளி
- தேங்காய் கோவா போளி
- பருப்பு சக்கரை போளி
- பால் போளி 2
- பால் போளி
- பருப்பு போளி
- தேங்காய் போளி
- 'கமர் கட்'
- பொரி மாவு உருண்டை 2
- பொறி மாவு
- பொரி மாவு உருண்டை
- கோதுமை வெல்ல உருண்டை
- அவல் சக்கரை
- தேங்காய் பால் எடுப்பது எப்படி?
- பால் கொழுக்கட்டை
- இனிப்பு சிற்றுண்டிகள்
-
▼
Aug 30
(19)
-
▼
August
(65)
No comments:
Post a Comment