Wednesday, October 7, 2020

போளி போண்டா

Ingredients:
  • பூரணத்துக்கு தேவையானவை:
  • கடலை பருப்பு 1 கப்
  • தேங்காய் துருவல் 1/2 கப்
  • வெல்லம் 1 1/4 கப்
  • ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
  • அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
  • நெய் 1/2 ஸ்பூன்
  • மேல் மாவு செய்ய:
  • மைதா 1 கப்
  • corn flour 1/2 cup
  • சிட்டிகை உப்பு
  • மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  • துளி சோடா உப்பு
  • பொறிக்க எண்ணை


Method:
  • கடலை பருப்பை அரை வேக்காடாக வேகவைக்கவும்.
  • ஆறினதும், பருப்பை நன்கு வடித்துவிட்டு, மிக்சி இல் பருப்பு, தேங்காய் , ஏலப்பொடி வெல்லம் எல்லாம் போட்டு அரைக்கவும்.
  • தண்ணீர் விட வேண்டாம்
  • அடுப்பில் நெய் விட்டு, அரைத்தத்தை கொட்டி கிளறனும்.
  • நன்கு கிளறவும்.
  • நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
  • ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
  • ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
  • பிறகு உருண்டை பிடிக்கவும்.
  • இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
  • தனியே வைக்கவும்.
  • ஒரு பேசின் இல் மைதா மாவு மற்றும் corn flour போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்
  • வாணலி இல் எண்ணை விட்டு சுட்டதும், பூரண உருண்டையை எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி, எண்ணை இல் போட்டு பொறிக்கவும்.
  • எல்லா உருண்டைகளையும் இப்படி பொறிக்கவும்.
  • பரிமாறும் போது, உருண்டையை விரலால் அழுத்தி குழி போல் செய்து, நெய் விட்டு தரவும்.


Notes:
  • இது ஆந்திரா டிபன். எனக்கு பேர் தெரியாது , ஆனால் சுவையாக இருக்கும். மேல் மாவு கரைக்காமல் அரைத்தும் செயலாம். தோசை மாவு போல அரைக்கணும்.

No comments:

Blog Archive