- பச்சரிசி 1/2 கப்
- புழுங்கல் அரிசி 1/2 கப்
- பயத்தம் பருப்பு 1/2 கப்
- கடலை பருப்பு 1/2 கப்
- கோதுமை 1/2 கப்
- வெல்லம் 2 1/2 கப்
- தேங்காய் 1/4 கப் பல்லு பல்லாக நறுக்கியது
- சுக்கு பொடி 1/4 ஸ்பூன்
- ஏலப்பொடி 1/4 ஸ்பூன்
- நெய் கொஞ்சம்
Method:
- பச்சரிசி , புழுங்கல் அரிசி ,பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, கோதுமை இவைகளை ஒவ்வொன்றாக வரட்டு வாணலி இல் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தம்பலத்தில் கொட்டவும்.
- கொஞ்சம் ஆறினதும், மிக்சி அல்லது மிஷின் இல் கொடுத்து மாவாக பொடிக்கவும்.
- தேங்காய் யை துளி நெய் விட்டு நல்ல பொன்னிறமாக வறுக்கவும்.
- வெல்லத்தை பொடித்து , ஒரு ஆழமான உருளி இல் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விடவும்.
- அது கரைந்ததும், வடிகட்டவும், மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
- நன்கு கொதிக்கும் போது, சுக்கு பொடி மற்றும் ஏலப்பொடி போடவும்.
- கம்பி பதம் வந்ததும், அடுப்பை சின்ன தாகி விட்டு, தேங்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
- இறக்கி வைத்து உருண்டை பிடிக்கவும் . சூட்டுடன் பிடிக்கணும்
- கை சுடாமல் இருக்க நெய் தடவிக்கொண்டு அல்லது அரிசி மாவு தடவிக்கொண்டு பிடிக்கலாம்.
- நெய் யை விட அரிசி மாவு சிறந்தது .
- உருட்டிய உருண்டைகளை , ஒரு முறம் அல்லது தாம்பாளத்தில் போட்டு பக்கத்தில் இருப்பவர்களை, அவர்கள் சிறுவார்களானாலும் சரி , உருட்டிக்கொண்டே இருக்க சொல்லுங்கள்.
- அப்படி செய்வதால், உருண்டைகள் இறுகும்.
- நீங்கள் உருட்டுவதற்க்குல் , மாவு உருளி இல் ஒட்டிக்கொண்டு எடுக்க வராவிட்டால், கவலை வேண்டாம்; மீண்டும் அடுப்பை மூட்டி கொஞ்சம் சுட பண்ணுங்கோ, போறும், மறுபடி மாவு நெகிழ்ந்து கொடுக்கும்.
- அப்புறம் மீண்டும் உருட்டலாம்.
- இப்படியாக எல்லா மாவையும் உருட்டவும்.
- சுவையான 'பொருள்விளங்கா உருண்டைகள்'தயார்.
- நிறைய நாள் வைத்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment