Wednesday, October 7, 2020

சொஜ்ஜி அப்பம்

Ingredients:
  • சன்ன ரவை 1 கப்
  • வெள்ளம் 3/4 கப்
  • ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
  • மைதா 2 கப்
  • நெய் 2 ஸ்பூன்
  • எண்ணை பொறிக்க


Method:
  • மைதாவை நன்கு சலிக்கவும்.
  • ஒரு சிட்டிகை உப்பு போட்டு, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கலந்து வைக்கவும்.
  • வெல்லத்தில் தண்ணீர் விட்டு வைக்கவும்.
  • கரைந்ததும், வடிகட்டி வைக்கவும்.
  • ஒரு உருளி இல் ரவையை போட்டு நெய்விட்டு நல்லா வறுக்கவும்.
  • வெல்ல தண்ணீரை விடவும்.
  • நன்கு கிளறவும்.
  • ஏலப்பொடி போடவும்.
  • வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.
  • பிறகு எலும்பிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • இப்ப மைதாவை எடுத்து சிறிய பூரி போல இட்டு, அதில் இந்த பூரண உருண்டை யை வைத்து, மூடி, கையால் மெல்லிய வடை போல் பரத்தவும்.
  • அதை அப்படியே எண்ணை இல் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவு தான், ' சொஜ்ஜி அப்பம்' ரெடி
  • குறைந்த தித்தீப்புடன் நல்லா இருக்கும்.


Notes:
  • மைதாவை எப்ப எடுத்தாலும் ஒரு முறை சலிக்கணும் . ஏன்னால், அதில் எப்பவும் புழு சீக்கிரம் வந்துவிடும் .சரியா?

No comments:

Blog Archive