Wednesday, October 7, 2020

மசாலா பருப்பு உருண்டை குழம்பு

Ingredients:
  • துவரம் பருப்பு - 1 கப்
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் - 5 - 6
  • எண்ணெய் - 2 - 4 டேபிள் ஸ்பூன்
  • புளி பேஸ்ட் 2 - 3 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு - 10 பல்
  • தக்காளி - 2 ( தேவையானால் )
  • உப்பு
  • சாம்பார் பொடி 3 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
  • வெந்தய பொடி வறுத்து அரைத்தது 1/2 ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • கடுகு 1 ஸ்பூன்


Method:
  • துவரம் பருப்பு 1 மணி நேரம் ஊரை வைத்து பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் உப்பு, பூண்டு சோம்பு,மிளகாய் வற்றல்சேர்த்து வடைக்கு அரைக்கும் பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.
  • சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவைகளை நறுக்கிக் கொள்ளவும்.
  • துருவிய தேங்காயோடு, சோம்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது அரைத்த பருப்போடு கொஞ்சம் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து (முருங்கை கீரையும் சேர்த்துக் கொண்டால் நல்லா இருக்கும்)பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து வேகவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • அடுத்து சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவைகளை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
  • பிறகு புளிஜலம் அல்லது வெறும் தண்ணிரை விடவும்.
  • அதில் புளி பேஸ்ட் போடவும்.
  • நன்கு கலக்கிவிட்டு, மஞ்சள் பொடி, சாம்பார்பொடி, வெந்தயபொடி மற்றும் பெருங்காயப்பொடி போடவும்.
  • மிளக்காய் பொடி வாசனை போகும்வரை கொதிக்கட்டும்.
  • பிறகு வேகவைத்துள்ள பருப்பு உருண்டைகளை அதில் போடவும்.
  • அடுப்படி சின்னதாக்கவும், அது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
  • சுவையான மசாலா பருப்பு உருண்டை குழம்பு தயார்.

No comments:

Blog Archive