Thursday, October 8, 2020

வெந்தய இட்லி

Ingredients:
  • இட்லி அரிசி -- 3 ஆழாக்கு (நான் இன்று பச்சரிசி  இல் தான் செய்தேன் )
  • வெந்தயம் -- - 3 டேபிள் ஸ்பூன்  (1 Table spoon = 15 grams)


Method:
  • வெந்தயத்தை  தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். 
  • இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போறும். 
  • முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.
  • 3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவையாக இருக்கும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக  தண்ணீர் சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும். 
  • உளுந்தை போல பார்ப்பதற்கு நுரைத்து வரும்; நம்ப முடியாத அளவிற்கு புஸு புஸு என்று வரும்.
  • அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். 
  • பிறகு அரிசியை   கொஞ்சம் நற நற வென அரைக்கவும். 
  • இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். 
  • மறு நாள் காலை நன்கு  பொங்கி வந்திருக்கும். 
  • எப்போதும்போல் இட்லி தட்டில் நனைத்த துணி அல்லது எண்ணை தடவி மாவை விட்டு, குக்கரில் ஆவியில் 7/10 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும். 
  • ஆறிய பிறகும் மெத்தென்றுதான் இருக்கும்.
  • அரைக்கும் பக்குவம் மிகவும் முக்கியம்.
  • மறு நாள்காலை தண்ணீர் ஊற்றக்கூடாது; முதல் நாளே பக்குவமாக கரைத்து வைக்க வேண்டும்.
  • அவ்வளவுதான் சூப்பர் வெந்தய இட்லி ரெடி. 
  • இந்த இட்லி ரொம்ப வெள்ளையாக இருக்காது, கொஞ்சம் கிரீம் கலரில் இருக்கும்.
  • வெந்தயம் என்பதால் அப்படி இருக்கும்.
  • இன்று காலை நான் செய்தேன், இரவு வரை மெத் என்று இருந்தது.


Notes:
  • உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த இட்லி மெத்தென்றும் இருக்கும்.
  • வெந்தயம் சேர்த்ததே தெரியாத அளவிற்கு இருக்கும்.
  • மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.
  • வாரம் ஒரு முறை வெந்தய இட்லி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

No comments:

Blog Archive