- கெட்டி அவல் 2 கப்
- மோர் அல்லது தண்ணீர் கொஞ்சம்
- கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு
- தாளிக்க எண்ணெய்
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
- இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
Method:
- அவலை 2 -3 முறை நன்கு களைந்து பிழிந்து மோரில் ஊற வைக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊறிய அவல் மீது கொட்டவும்.
- உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- அவ்வளவு தான் எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
- சுவையான அவல் இட்லி ரெடி.
No comments:
Post a Comment