- 1 கப் வெந்த துவரம் பருப்பு
- ஒரு கை நிறைய 'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்'
- 1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
- 1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
- உப்பு - தேவையான அளவு
- 2 டீ ஸ்பூன் நெய்
- 1 டீ ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
- 1டீ ஸ்பூன் கடுகு
- 1 டீ ஸ்பூன்சீரகம்
- 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
- 1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
Method:
- வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
- 1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
- உப்பு போடவும்.
- மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
- வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
- நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
- ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணி விட்டு விளாவவும்.
- ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
- 'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்' மற்றும் கொத்துமல்லி தூவவும்.
- சுவையான , மணமான 'பன்னீர் ரசம்' தயார்.
- இந்த ரோஜா இதழ்கள் இந்த ரசத்துக்கு அருமையான மணம் தரும்
No comments:
Post a Comment