- ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- தக்காளி 2 ( விதைகள் நீக்கவும்) - நறுக்கி வைக்கவும்
- பூண்டு 10 - 12 பற்கள் - நறுக்கவும்
- மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
- பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
- உப்பு
- கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி 1 கை
- 2 டீ ஸ்பூன் மிளகு சீரகம் உடைத்து
- நெய் 2 ஸ்பூன்
Method:
- வாணலி il நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
- நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை போடவும், நன்கு வதக்கவும்.
- உப்பு போடவும், 1 டம்பளர் தண்ணீர் விடவும்.
- நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
- ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகம் போடவும்.
- மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
- அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
- கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தூவவும்.
- உங்களது தக்காளி + பூண்டு ரசம் தயார், ரொம்ப அருமையாக இருக்கும்.
- என்காத்தில் எப்பவும் இது தான்
- சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
- வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.
- 'புளியே' இல்லாத ரசம் இது
No comments:
Post a Comment