- 1/2 கப் வேகவைத்த பயத்தம் பருப்பு
- 2 - 4 பச்சை மிளகாய்களை பருப்புடன் வேகப்போடுங்கள்
- 2 இன்ச் இஞ்சி தோல் சீவி துருவி பார்ப்புடன் வேகப்போடுங்கள்.
- 1 எலுமிச்சை இன் சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
- 1/4 மஞ்சள் பொடி
- உப்பு
- நெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
- கறிவேப்பிலை / கொத்துமல்லி
Method:
- குக்கரில் பயத்தம்பருப்பு வைக்கும்போதே, அதில் துருவின இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை போட்டுவிடவும்.
- வாணலி இல் நெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- அதில் பருப்பு கலவையை கொட்டவும்.
- அதில் மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு எல்லாம் போடவும்.
- கொஞ்சநேரம் அது கொதிக்கட்டும்.
- 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவணும்.
- அது கொதித்ததும் இறக்கிடணும்.
- பிறகு எலுமிச்சை சாறு விட்டு கலக்கணும்.
- ரொம்ப சாதுவான ரசம் இது
Images:
No comments:
Post a Comment