Wednesday, October 7, 2020

வேப்பம் பூ ரசம்

Ingredients:
  • 2 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1/2 டீ ஸ்பூன் கடுகு
  • 8 - 10 மிளகாய் வற்றல்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் வேப்பம் பூ ( புது பூ அல்லது காய்ந்த பூ )
  • 2 டீ ஸ்பூன் நெய்
  • கறிவேப்பிலை


Method:
  • வாணலி இல் 1 டீ ஸ்பூன் நெய்விட்டு முதலில் வேப்பம் பூவை வைத்து தனியே எதுத்து வைத்துக்கொள்ளணும் .
  • மீண்டும் 1 டீ ஸ்பூன் நெய்விட்டு கடுகு கறிவேப்பிலை மிளகாய் வற்றல் தாளித்து, 2 டம்ளர் தண்ணீர் விடவும்.
  • புளி பேஸ்ட் போட்டு நன்கு கலக்கவும்.
  • உப்பு பெருங்காயம் போடவும்.
  • நன்கு கொதிக்க விடுங்கோ.
  • வாசனை போனதும் மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
  • வறுத்து வைத்துள்ள வேப்பம் பூவை போடவும்.
  • ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • சீக்கிரம் செய்யக்கூடிய சுவையான ரசம் இது


Notes:
  • எங்க பாட்டி சொல்வா, இந்த ரசம் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பண்ணக் கூடாது என்று. எனவே இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

No comments:

Blog Archive