Wednesday, October 7, 2020

அரைத்துவிட்ட ரசம்

Ingredients:
  • மிளகு ஒரு டீஸ்பூன்
  • தனியா ஒரு டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 8 - 10
  • தேங்காய் துருவல் 2 - 4
  • பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன்
  • வெந்த துவரம் பருப்பு
  • புளி பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன்
  • நெய் 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் ஒரு ஸ்பூன்
  • கடுகு ஒரு ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை


Method:
  • வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகு , மிளகாய் வற்றல் மற்றும் தனியாவை வறுக்கவும்.
  • தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
  • மீண்டும் வாணலி இல் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • புளி பேஸ்ட் மற்றும் இரண்டு தம்ளர் தண்ணிர் விடவும்.
  • உப்பு, அரைத்த விழுது போடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்கயப்பொடி போடவும்; நன்கு கலக்கவும்.
  • அது நன்கு கொதிக்கட்டும்.
  • வெந்த பருப்பை கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • ரசம் ஒரு ஏழு எட்டு நிமிடம் கொதித்ததும் கரைத்த பருப்பை கொட்டவும்.
  • அது மீண்டும் ஒரு 2 நிமிடத்தில் கொதிக்க ஆரம்பிக்கும்; அப்போது இறக்கவும்.
  • சுடு சாதத்துடன் நெய் விட்டு பரிமாறவும்.
  • ரொம்ப சுவையாக இருக்கும் இந்த அரைத்துவிட்ட ரசம் .

No comments:

Blog Archive