- 2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
- 2 -3 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
- 2 -3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 -3 டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
- 1 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 - 2 டீ ஸ்பூன் நெய்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- மஞ்சள் பொடி
- உப்பு
Method:
- வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
- அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
- ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும்.
- பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ,கொத்துமல்லி எல்லாவற்றையும் மிக்சி இல் விழுதாக அரைத்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
- அது ஒரு 5 நிமிடம் கொதிக்கட்டும் .
- மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
- அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
- ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான ' கர்நாடகா சாறு ' தயார்.
- சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
Notes:
- குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
- இதை புளி பேஸ்ட் போட்டும் செய்யலாம், புளி மற்றும் தக்காளி இரண்டும் போட்டும் செய்யலாம்...உங்கள் டேஸ்டுக்கு தக்கபடி செய்யலாம்
No comments:
Post a Comment