- 2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
- 1/2 கப் வெந்த துவரம் பருப்பு
- 2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
- 1 tea ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
- 1 சிட்டிகை பெருங்காயம்
- கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
- 1 டீ ஸ்பூன் மிளகாய் பொடி
- 1/2 டீ ஸ்பூன் மிளகு பொடி
- 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
- 1/2 டீ ஸ்பூன் சீரகப்பொடி
- 1 ஸ்பூன் கடுகு
- 2 - 4 குண்டு மிளகாய் வற்றல்
- 1 - 2 டீ ஸ்பூன் நெய்
- உப்பு
Method:
- வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
- அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.
- ஒரு மூடி போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- பிறகு, மிளகு பொடி , சீரகப்பொடி ,வெந்த துவரம் பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி,பெருங்காயம் எல்லாம் சேர்க்கவும்.
- அது ஒரு 10 நிமிடம் கொதிக்கட்டும் .
- மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
- அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
- கொத்துமல்லி தூவவும்.
- ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான கர்நாடகா தக்காளி ரசம் தயார்.
- சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
Notes:
- குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
No comments:
Post a Comment