Thursday, October 8, 2020

மாங்காய் சாதம்

Ingredients:
  • மாங்காய் 1 ( தோல் சீவி துருவவும்)
  • சாதம் 1 கப்
  • APP 2 - 3 ஸ்பூன்
  • வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
  • உப்பு
  • எண்ணை கொஞ்சம்
  • தாளிக்க :
  • கடுகு 1 ஸ்பூன்
  • உளுந்து 1 ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 ஸ்பூன்
  • பெருங்காயம் 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்


Method:
  • வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
  • பிறகு துருவி வைத்துள்ள மாங்காய் யை போடவும்.
  • உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
  • பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும்.
  • எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
  • ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெவிட்டு கலக்கவும்.
  • பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
  • அவ்வளவுதான் "மாங்காய் சாதம்" தயார்.
  • மணமாக நல்லா இருக்கும்.
  • இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்


Notes:
  • தக்காளி போல மாங்காய்யையும் 'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும்

No comments:

Blog Archive