Thursday, October 8, 2020

ஹம்முஸ் (Hummus)

Ingredients:
  • வேகவைத்த 'காபுலி சென்னா' என்று சொல்லப்படும் வெள்ளை கொத்துக் கடலை ஒரு கப்
  • ( கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளவும் )
  • பூண்டு 6 - 8 பற்கள்
  • ஒரு சிறிய எலுமிச்சை இன் சாறு
  • வெள்ளை எள் 1 டேபிள் ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் அல்லது ரீபைண்ட் ஆயில் 1 /2 - 3 /4 கப்
  • உப்பு


Method:
  • எண்ணெய் தவிர எல்லாவற்றையும் மிக்சிஜாரில் போடவும்.
  • பாதி எண்ணையை விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு தொடர்ந்து மிக்சியை இயக்கவும்.
  • கொத்துக்கடலை நன்கு மசிந்து விடும்.
  • அதை நன்கு கிளறி விட்டு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அரைக்கவும்.
  • எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது.
  • கூடாது கூடாது கூடாது
  • அரைக்க லகுவாக இருக்க எண்ணெய் மட்டுமே சேர்க்கலாம்.
  • நல்ல கெட்டியான துவையல் பதம் வரும் வரை அரைக்கவும்.
  • இதுவும் நல்ல வெண்ணைபோல இருக்கும்.
  • கலரும் 'வெள்ளை வெளீர்' என்று இருக்கும் .
  • அவ்வளவுதான், மிக்சி இல் இருந்து எடுத்து பாட்டிலில் சேமிக்க வேண்டியது தான்.
  • கையோடு பிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
  • தேவையான போது , கிண்ணி இல் எடுத்துக் கொண்டு மேலே கொஞ்சம் ஆலிவ் ஆயில் விட்டு பரிமாறவேண்டியது தான்.
  • ஒருமுறை செய்து பாருங்கள், மெலிதான பூண்டு மணத்துடன் அருமையாக இருக்கும், 'சில்'
  • என்கிற 'ஹம்முஸ்'


Notes:
  • "ஹம்முஸ்" என்று சொல்லப்படும் ஒரு 'சைடு டிஷ்' இது அரேபிய உணவு ! செய்வது மிக எளிது ஆனால் ருசியோ அபாரம். இதை அங்கு 'குபூஸ்' என்று சொல்லப்படும் ரொட்டியுடன் தருவார்கள்.
  • இங்கு நாம் இதை சப்பாத்தி , நான் , பிரட் என்று எதனுடனும் தொட்டு சாப்பிடலாம். எப்பவும் 'சில்' என்று இருக்கவேண்டும் இது, எனவே சிலநாட்கள் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். என்றாலும் பிரெஷ் ஆக ஓரிரு நாட்களில் உபயோகித்தல் நலம்

Images:




No comments:

Blog Archive