Thursday, October 8, 2020

கொத்துமல்லி சாதம்

Ingredients:
  • வடித்த சாதம் 1 கப்
  • கடுகு 1/2 டீ ஸ்பூன்
  • உளுந்து 1 டீ ஸ்பூன்
  • கொத்துமல்லி - ஒரு பெரிய கட்டு
  • பச்சைமிளகாய் 10 - 12
  • கொஞ்சம் எண்ணை தாளிக்க
  • உப்பு


Method:
  • ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
  • அது ஆறட்டும்.
  • மிக்சி இல் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
  • மையாக அரைக்கவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, போட்டு தாளிக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள கொத்துமல்லியை போடவும்.
  • நன்கு கிளறவும், அது தண்ணீர் வற்றி கெட்டியாக தொக்கு போல வரும்.
  • அப்போது இறக்கிவிடவும்.
  • பிறகு ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் உப்பு மற்றும் செய்துள்ள மசாலாவை போட்டு மெல்ல கிளறவும்.
  • அவ்வளவு தான் சுவையான கொத்துமல்லி சாதம் தாயர்


Notes:
  • நிறைய கொத்துமல்லி இருக்கும்போது இப்படி செய்து வைத்துக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் சாதம் செய்யலாம் மேலும், பூண்டு பிடித்தவர்கள் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்து செய்யலாம்

No comments:

Blog Archive