- ஒருபத்து பீன்ஸ்
- ரெண்டு காரட்
- ஒரு கை உரித்த பச்சை பட்டாணி
- ரெண்டு வெங்காயம்
- நான்கு பச்சை மிளகாய்
- பத்து பல் பூண்டு
- ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
- நான்கு டீஸ்பூன் நெய்
- இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
- உப்பு
- பிரிஞ்சி இலை ஒன்று
- பாசுமதி அரசி ரெண்டு கப்
- ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு
- குங்குமப் பூ பத்து பன்னிரண்டு இழைகள்
- பிரியாணி மசாலா பொடி அரைக்க :
- தனியா 2 டேபிள் ஸ்பூன்
- பிரிஞ்சி இலை 2
- மிளகாய் வற்றல் 4
- பட்டை 2
- கிராம்பு 1 டீ ஸ்பூன்
- சீரகம் 1 டீ ஸ்பூன்
- ஜாதி பத்திரி 2 பூ
- ஜாதிக்காய் சின்னது ஒன்று
- பெரிய ஏலக்காய் இரண்டு மூன்று
- அன்னாசிப்பூ 7 - 8
- ஏலக்காய் 10 - 12
- மிளகு 2 டீ ஸ்பூன்
- சோம்பு 1 டீ ஸ்பூன்
Method:
- முதலில் மசாலா பொடிக்கான சாமான்களை ஒவ்வொன்றாக வெறும் வாணலி இல் வறுத்து ஆறவைக்கவும்.
- ஆறினதும் பொடிக்கவும்.
- பாசுமதி அரிசியை களைந்து வடியப்போடவும்.
- வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, பிரிஞ்சி இலையைப்போட்டு தாளித்துக்கொள்ளவும்.
- பிறகு, தண்ணீர் வடிந்த அரிசியை போட்டு நன்கு வறுக்கவும்.
- அதை குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
- அல்லது எலக்டிரிக்கல் குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
- மீண்டும் வாணலி இல் ஒரு ஸ்பூன் நெய்விட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.
- பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் வெங்காயத்தை மிக்சி இல் மையாக அரைக்கவும்.
- அரைத்த விழுதை காய்கறிமேல் கொட்டி , நன்கு கிளறவும்.
- தேவையானால் கொஞ்சம் எண்ணைவிட்டுக்கொள்ளவும்.
- இப்பொழுது கொஞ்சம் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி போட்டு நன்கு கிளறவும்.
- அது நன்கு வதங்கியதும், வறுத்து வைத்துள்ள அரிசிமேல் கொட்டவும்.
- ஒரு கப்புக்கு இரண்டு கப் என்று தண்ணீர் அளந்து விடவும்.
- அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விடவும்.
- ஒரு ஸ்பூன் எண்ணை விடவும்.
- நன்கு கலந்து விடவும்.
- ருசிபார்த்து உப்பு போட்டுக்கொள்ளவும்.
- குக்கர் பாத்திரத்தை குக்கரில் வைத்து ஆன் செய்யவும்.
- மூன்று விசில் வந்ததும் அணைத்துவிடவும்.
- குங்குமப் பூ வை தண்ணீர் விட்டு வைக்கவும்.
- வெந்த பிரியாணியை வெளியே எடுத்ததும் குங்குமப் பூ கரைசலைக் கொட்டி ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
- இதற்கு வெங்காய தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.
Notes:
- பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் உபயோகிக்கலாம் , அதனால் பிரியாணி இந்த சுவை கூடும்
Images:
No comments:
Post a Comment