Thursday, October 8, 2020

புளிப் பொங்கல்

Ingredients:
  • அரிசி நொய் - 1 cup
  • புளி - ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு
  • கடுகு- ஒரு டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
  • வற்றல் மிளகாய் - 2 -4
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • பெருங்காய பொடி - கொஞ்சம்
  • நல்லெண்ணெய் - 2 -3 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/2 டீ ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • உப்பு சேர்த்து, புளியை கரைத்து வைக்கவும். அது 3 முதல் 4 டம்ளர் வரை இருக்கணும்.
  • உருளி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி போட்டு தாளிக்கவும்.
  • புளித்தண்ணிரை அதில் விடவும், பெருங்காய பொடி சேர்க்கவும்.
  • புளித் தண்ணீர் நன்றாக கொதித்ததும், ரவையை தூவிக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறவும்.
  • அடுப்பை சின்னதாக வைக்கவும். நடு நடுவில் கிளறி விடவும்.
  • நொய் நன்கு வெந்ததும் இறக்கவும்.
  • புளிப்பு - காரம் சேர்ந்து ரொம்ப நல்லா இருக்கும் இந்த பொங்கல்.
  • சூடாக அல்லது நல்லா ஆறினதும் கூட இதை சாப்பிடலாம். தொட்டுக்க ஒன்றுமே வேண்டாம் அல்லது கட்டித் தயிர் தொட்டுக்கலாம்

No comments:

Blog Archive