- வடித்த சாதம் 1 கப்
- கடுகு 1/2 டீ ஸ்பூன்
- உளுந்து 1 டீ ஸ்பூன்
- கொத்துமல்லி - ஒரு பெரிய கட்டு
- புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் 10 - 12
- கொஞ்சம் எண்ணை தாளிக்க
- உப்பு
Method:
- ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
- அது ஆறட்டும்.
- மிக்சி இல் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா, புளி பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
- மையாக அரைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, போட்டு தாளிக்கவும்.
- அரைத்து வைத்துள்ள புதினா விழுதை போடவும்.
- நன்கு கிளறவும், அது தண்ணீர் வற்றி கெட்டியாக தொக்கு போல வரும்.
- அப்போது இறக்கிவிடவும்.
- பிறகு ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் உப்பு மற்றும் செய்துள்ள மசாலாவை போட்டு மெல்ல கிளறவும்.
- அவ்வளவு தான் சுவையான புதினா சாதம் தயார்
Notes:
- நிறைய புதினா வாங்கி இப்படி செய்து வைத்துக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் சாதம் செய்யலாம். மேலும், பூண்டு பிடித்தவர்கள் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்து செய்யலாம்
No comments:
Post a Comment