Thursday, October 8, 2020

எள்ளோதரை அல்லது எள் சாதம்

Ingredients:
  • அரிசி - இரண்டு கப்,
  • எள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  • தாளிக்க:
  • கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, எல்லாமாக 1 டீ ஸ்பூன்
  • 2 மிளகாய் வற்றல்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • நல்லெண்ணைய் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • அரிசியை, உதிரியாக சாதமாக வடித்து கொள்ளவும்.
  • ஒரு தாம்பாளம் அல்லது பேசினில் போட்டு பரப்பி வைத்து, 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு சாதம் உடையாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • எள்ளை, வாணலி இல் போட்டு , கருகாமல் 'படபட' வென பொறித்து தனியாக வைக்கவும்.
  • அதே வாணலி இல் மிளகாய் வற்றலையும் போட்டு, வறுத்து கொள்ளவும்.
  • கொஞ்சம் ஆறியவுடன், உப்பு மற்றும் வறுத்த எள், மிளகாய் வற்றல் எல்லாம் ஒன்றாக மிக்சி இல்போட்டு
  • பொடிக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.
  • பொடித்து வைத்துள்ள எள் பொடியை சாதத்தின் மேல் பரவலாக தூவி, மெதுவாக கலநதுவிடவும்.
  • அவ்வளவுதான், சுவையான 'எள்ளோதரை அல்லது எள் சாதம்' தயார்.
  • மத்தியானம் லுஞ்சுக்கு எடுத்து செல்ல மிகவும் நன்றாக இருக்கும்

No comments:

Blog Archive