- பீன்ஸ், கேரட், வெங்காயம், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி - எல்லாமாக சேர்த்து 2 கப்
- தக்காளி - தேவையானால் 1 விதைகள் நீக்கி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3 கப் குதிரைவாலி அரிசி - நன்கு அலசி, ஒரு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு வடிய விடவும்.
- முந்திரி 10 -12
- ஏலக்காய் - 4
- லவங்கப்பட்டை - சிறு துண்டு
- கிராம்பு - 4
- பூண்டு- இஞ்சி விழுது 1 டீ ஸ்பூன்
- ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி
- பச்சை மிளகாய் - 4 கீறி வைத்துக்கொள்ளவும்.
- பச்சை கொத்துமல்லி கொஞ்சம்
- நெய் - 2 டேபிள் ஸ்பூன் + எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
Method:
- குக்கரில் எண்ணெய் + 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, மசாலா சாமான்களையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.
- பூண்டு- இஞ்சி விழுது, வெங்காயம் , மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.
- அடுத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- இப்போது ஊறவைத்து வடித்து வைத்த குதிரைவாலியை போட்டு ஒரு புரட்டு புரட்டவும்.
- 5 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடிவிடவும்.
- மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கிவிடவும்.
- குக்கர் திறக்க வந்ததும், மீதி நெய், தக்காளி கொத்துமல்லி துருவி, ஒரு கிளறு கிளறி, வெங்காய ராய்த்தவுடன் பரிமாறவும்.
- சுவையான குதிரைவாலி பிரியாணி தயார்.
- வெங்காய ரைத்தா அல்லது ஜவ்வரிசி ராய்த்தாவுடன் பரிமாறலாம்
Notes:
- தேவையானால் பிரிஞ்சி இலை சேர்க்கலாம்
No comments:
Post a Comment