- 3 ஸ்பூன் புளி பேஸ்ட்
- 2 ஸ்பூன் துவரம் பருப்பு
- 2 ஸ்பூன் கடலை பருப்பு
- 2 ஸ்பூன் சாம்பார் பொடி
- 2 -3 பெரிய வெங்காயம்
- 25 - 30 பல் பூண்டு
- 4-6 இன்ச் இஞ்சி துண்டு
- 1 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
- கடுகு
- மஞ்சள் பொடி
- பெருங்காயம் (தேவயானால் )
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- எண்ணெய்
- உப்பு
- 2 ஸ்பூன் பொடித்த வெல்லம்
Method:
- முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .
- பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
- மூன்றையும் மையாக அரைக்கவும்.
- வாணலி இல் நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு,
- கறிவேப்பிலை தாளிக்கவும்.
- அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
- பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.
- 2 டம்பளர் தண்ணீர்
- விடவும்.
- புளி பேஸ்ட், சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி
- எல்லாம் சேர்க்கவும் .
- நன்கு கொதித்து கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
- பிறகு இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.
- சாதத்துடன் பரிமாறவும். தொட்டுக்கொள்ள அப்பளம் போரும்
Notes:
- இந்த குழம்பை ஒரு வாரம் வரை ஃபிரிஜ் இல்லாமலே கூட வைத்து சாப்பிடலாம். ஃபிரிஜ் இல் வைத்தால் 1 மாதம் கூட வைத்துக்கொள்ளலாம். (புளிக்காய்ச்சல் போல் )
- வெளிஊர்களுக்கு போகும் போது எடுத்து செல்ல லாம் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். சமயத்தில் "Bread" il தடவி சாப்பிடலாம்
No comments:
Post a Comment