Tuesday, July 22, 2014

'பாகற்காய் பகோடா'

தேவையானவை:
5 - 6 பாகற்காய் (நிதானமான அளவு )
1cup கடலை மாவு
1 / 2cup அரிசி மாவு
2 sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 /2sp மஞ்சள் பொடி
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

பாகற்காயை நன்கு அலம்பி, நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
இரண்டு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
மஞ்சள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிசிறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்பொடி, சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு 'பஜ்ஜி 'மாவு பதத்துக்கு கரைக்கவும்.
இரண்டையும் அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு நன்கு பிழியவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , பாகற்காய் துண்டுகளை கரைத்துவைத்துள்ள மாவில் முக்கி எண்ணெய் இல் போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.

குறிப்பு: பாகற்காயை வேகவைத்தும் இதுபோல் செய்யலாம் .

No comments:

Blog Archive