Tuesday, July 22, 2014

ஜவ்வரிசி போண்டா

தேவையானவை :

ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
கடலை மாவு 2 - 3 டீ ஸ்பூன் 
உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் ) 
வெங்காயம் பெரிசு ஒன்று 
இஞ்சி துருவியது கொஞ்சம் 
மிளகாய் பொடி காரத்துக்கு ஏற்ப 
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து கலந்து வைத்துள்ள மாவை உருட்டி போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும் புன்னகை

No comments:

Blog Archive